குப்பை மேனி


இந்த செடியினை கிராமத்தில் இருந்தவர்களுக்கு நன்றாக தெரிந்து இருக்கும். இதனை தெருவின் அழகி, பூனை வணங்கி என்றும் சொல்வார்கள். எந்த வகை புண்ணாக இருந்தாலும் குப்பை மேனி இலையை வைத்துக் கட்டினால் ஆறும்.

இந்த குப்பை மேனி இலையுடன் கொஞ்சம் உப்பும், மஞ்சள் துண்டு சேர்த்து அரைத்து உடம்பில் 

ஏற்பட்டுள்ள  சொறி, சிரங்கின் மேல் தடவி அரைமணி நேரம் ஊறவிட்டு கழுவ விரைவில் குணமாகிவிடும்.

குப்பை மேனி இலையை வதக்கி, பிழிந்து 2துளி சாறெடுத்துக் காதில் ஊற்றினால் காதுவலி நீங்கும்.

இந்த குப்பை மேனி செடியில் புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன.

நெல்லிக்காய்

நெல்லிக்காய்

குறைவான விலையில் கிடைக்கும் நெல்லிக்காய் உயர்ந்த பயன்களை தருகிறது 

நெல்லிக்காய்த் தைலம் உச்சந்தலையைக் குளிரச் செய்யும். கருமையான தலைமுடியைத் தரும்.
இது இதயத்திற்கு வலிமையை வழங்கி வாழ்நாளை நீட்டிக்கும். குடற்புண், இரத்தப்பெருக்கு, நீரிழிவு, கண்நோய் ஆகியவற்றைக் குணமாக்கும். 

இதில் புரதம், கொழுப்பு, கரிச்சத்து, சுண்ணாம்புச் சத்து, தாதுப்பொருள், இரும்புச்சத்து, வைட்டமின்’சி’ சத்து அதிகம் உள்ளது.

பணம்

பணம் இருந்தால் பாமர மனிதனும் மாளிகையில் இருக்கலாம்
பணம் இல்லையென்றால் பணக்காரனும் படும் பிச்சைகாரனாகலாம்

பணம் இருந்தால் உன்னை சுற்றி பல பேர்
பணம் இல்லையென்றால் நீ பல பேரை சுற்ற வேண்டும்

பணம் இருந்தால்தான் காதலி கூட உன்னுடன் இருப்பாள்
பணம் இல்லையென்றால் கட்டிய மனைவி கூட கண்டுகொள்ளமாட்டாள்

பணம் இருந்தால் பந்தபாசம் உன்னோடு
பணம் இல்லையென்றால் எல்லாம் பகல் கனவாய் போகும்

பணம் இருந்தால் பத்து விரலுக்கும் பத்து மோதிரம்
பணம் இல்லையென்றால் பத்து விரலுக்கும் சேர்த்து ஒரு பாத்திரம்

பணம் இருந்தால் பாசத்தோடு பார்க்கும் கண்கள்
பணம் இல்லையென்றால் பாவமாய் பார்க்கும் கண்கள்

பணம் இருந்தால் எவ்வளவு அசிங்கமாய் இருந்தாலும் எல்லோருக்கும் அழகாய் தெரிவாய்
பணம் இல்லையென்றால் எவ்வளவு அழகாய் இருந்தாலும் அசிங்கமாய் தெரிவாய்

பணம் இருந்தால் உன்உறவை பிரிய மனம் இல்லாமல் அழும் உறவுகள்
பணம் இல்லையென்றால் சுடுகாடு கூட உன் வரவை ஏற்க மறுக்கும்.

- ஜெ. தசரதன்

உன்னை பற்றி சொல்லும் ஒரு காதல்

காதல் உன்னை பற்றி உனக்கு சொல்லும்

காதல் வாழ்க்கையை பற்றி உங்கள் இருவருக்கும் சொல்லும்

காதல் மனதை பற்றி சொல்லும், மதத்தை பற்றி சொல்லாது

காதல் காசை பற்றி சொல்லும் காசு இல்லாமல் போனால் எப்படி என்பதை பற்றியும் சொல்லும்

காதல் காதலை பற்றி சொல்லும்போது இனிமை

காதல் மரணத்தை பற்றி சொல்லும்போதும் இனிமை

காதல் சொர்க்கத்தை பூமியில் காண்பிக்கும்

காதல் நீ அவளிடம் சொல்லும்போது இதயம் வேகமாய் துடிக்கும்

காதல் அவள் உன்னிடம் சொல்லும்போது இனிக்கும்

காதல் இருவரும் சொல்லி சொல்லாமல் ஓடும்போது வெறுக்கும்

காதல் உங்களுக்கு ரோஜாப்பூ 

காதல் சில பெற்றோர்களுக்கு நெருப்பு

காதல் வாழ்க்கையின் அனுபவ பாடம்

காதல் உங்களை நீங்களே திரும்பி பார்க்கலாம்

காதல் காதலில் நீங்கள் முதலாம் வகுப்பு மாணவர்களாய் இருக்க கற்றுக்கொள்ளுங்கள் அப்போதுதான் 

காதல் தேர்வில் வெற்றி பெற்றால் மேலும் மேலும் படிக்கலாம்

காதல் தேர்வில் தோல்வி பெற்றாலும் மீண்டும் படிக்கலாம்

காதல் வாழ்க்கையில் எப்போதும் எதிலும் தேவை

காதல் வெற்றி பெற்றவன் முற்றுபுள்ளி

காதல் தோல்வி பெற்றவர்களுக்கு வாழ்க்கையின் துவக்கம் தெரியும்...

-ஜெ. தசரதன்

கணினி கலைச் சொற்கள்

data-------------------------> தரவு, தரவுகள்

data administration---------> தரவு நிர்வாகி

data aquisation--------------> தரவு ஈட்டல்

data bank-------------------> தரவு வங்கி

data base-------------------> தரவுத் தளம்

data base administrator----> தரவுத்தள நிர்வாகி

data base analyst-----------> தரவுத் தளப் பகுப்பாய்வாளர்

data base environment-----> தரவுத் தளச் சூழல்

data base management system-> தரவுத் தள மேலாண் அமைப்பு

data base manager---------> தரவுத் தள மேலாளர்

data base packages---------> தரவுத் தளத் தொகுப்புகள்

data base specialist---------> தரவுத் தள வல்லுனர்

data base system-----------> தரவுத்தள அமைப்பு

data catalog----------------> தரவு விவரப்பட்டி

data centre----------------> தரவு மையம்

data collection-------------> தரவுத் திரட்டல்

data communication-------> தரவுத் தொடர்பு

data compression----------> தரவு நெருக்கம்

data conversion------------> தரவு வடிவ மாற்றம்

data definition-------------> தரவு வரையறை

data dictionary-------------> தரவு அகராதி

data editing----------------> தரவு சீரமைப்பு

data entry-----------------> தரவுப் பதிவு, தரவு உள்ளீடு

data entry device----------> தரவுப் பதிவுக் கருவி

data entry operator--------> தரவு உள்ளீட்டாளர்

data export----------------> தரவு ஏற்றுமதி

data field-------------------> தரவுப்புலம்

data file--------------------> தரவுக் கோப்பு

data file processing---------> தரவுக் கோப்புச் செயலாக்கம்

data flow-------------------> தரவுப் பாய்வு

data flow analysis----------> தரவுப் பாய்வு பகுப்பாய்வு

data flow diagram----------> தரவுப் பாய்வுப் படம்

data gathering-------------> தரவு திரட்டுதல்

data import----------------> தரவு இறக்குமதி

data item------------------> தரவு உருப்படி

data link-------------------> தரவு இணைப்பு

data logging---------------> தரவு பதிதல்

data management---------> தரவு மேலாண்மை

data manipulation---------> தரவு கையாளல்

data model----------------> தரவுப் படிமம்

data name----------------> தரவுப் பெயர்

data processing-----------> தரவுச் செயலாக்கம்

data processing center----> தரவுச் செயலாக்க மையம்

data processing management-> தரவுச் செயலாக்க மேலாண்மை

data processing system---> தரவுச் செயலாக்க அமைப்பு

data processor-----------> தரவுச் செயலகம்

data protection----------> தரவுக் காப்பு

data security------------> தரவுப்பாதுகாப்பு

data sheet---------------> தரவுத் தாள்

data storage device------> தரவுத் தேக்கக் கருவி

data structure-----------> தரவுக் கட்டமைப்பு

data type----------------> தரவு வகை

data validation-----------> தரவு செல்லுபடிச் செய்தல்

data value---------------> தரவு மதிப்பு

datum-------------------> தரவு (ஓரு தரவு)

dbms(data base management system)-> தரவுத் தள மேலாண் அமைப்பு

கணினி கலைச் சொற்கள்

calculating---------------> கணக்கிடல்

caculations---------------> கணக்கீடுகள்

caculator-----------------> கணிப்பான்

calculator mode----------> கணிப்பான் நிலை

cancel--------------------> நீக்கு

capacity------------------> கொள்திறன்

caps lock-----------------> மேலெழுத்துப் பூட்டு

carriage return(CR)------> ஏந்தி மீளல்

catalog-------------------> அடைவு

cell-----------------------> சிற்றறை, நுண்ணறை

cell pointer---------------> நுண்ணறைச்சுட்டி

center--------------------> மையம், மையப்படுத்து

central processing unit(CPU)----> மைய செயலகம்

central processor---------> மையச் செயலி

channel-------------------> தடம்

character-----------------> உரு

character code------------> உருக்குறிமுறை

character generator-------> உரு ஆக்கி

characteristic--------------> படி

character map-------------> உரு விவரப்படம்

character recognition------> உரு அறிதல்

character set--------------> உருக்கணம்

character string-----------> உருச்சரம்

chart----------------------> வரைபடம்

clear-----------------------> துடை

click-----------------------> ‘கிளிக்’, அழுத்து

clone-----------------------> நகலி, போலிகை

close-----------------------> மூடு

closed file------------------> மூடிய கோப்பு

coaxial cable---------------> அச்சு ஒன்றிய வடம்

code-----------------------> குறிமுறை

collection------------------> திரட்டல்

color coding---------------> வண்ணக் குறிமுறை

color graphics------------- > வண்ண வரைவியல்

column--------------------> நெடுவரிசை

column split---------------> நெடுவரிசைப் பிரிப்பு

command-----------------> கட்டளை, ஆணை

command key-------------> கட்டளைத்திறவு, கட்டளைப்பொத்தான்

comment------------------> குறிப்புரை

common storage-----------> பொதுத் தேக்கம்

communication-------------> தொடர்பு

communications link--------> தொடர்பு இணைப்பு

communications processor--> தொடர்பு செயலகம்

communications satellite----> தொடர்பு செயற்கைக்கோள்

communications software---> தொடர்பு மென்பொருள்

compaction-----------------> நெருக்கம்

compare--------------------> ஒப்பிடு

comparison-----------------> ஒப்பீடு

comparative operator-------> ஒப்பீட்டு இயக்கி

compilation-----------------> தொகுத்தல்

compiler--------------------> தொகுப்பி

compiler language-----------> தொகுப்பு மொழி

component------------------> உறுப்புக்கூறு

compuserve-----------------> கணிச்சேவை

computation-----------------> கணிப்பு

computer--------------------> கணிப்பொறி

computer-aided manufacturing-> கணிப்பொறிவலய உற்பத்தி

computer code------------------> கணிப்பொறி நிரல்

computer game-----------------> கணிப்பொறி விளையாட்டு

computer graphics--------------> கணிப்பொறி வரைவியல்

computer network--------------> கணிப்பொறி வலையமைப்பு

computer operations------------> கணிப்பொறி சார் செயல்பாடுகள்

computer user------------------> கணிப்பொறி பயனர்

computer utility-----------------> கணிப்பொறிப் பயனமைப்பு

computerization-----------------> கணிப்பொறிமயமாக்கல்

computerized database----------> கணிப்பொறித் தரவுத் தளம்

computerised data processing----> கணிப்பொறி வழித்தரவுசெயலாக்கம்

computing-----------------------> கணிப்பு

condition-------------------------> நிபந்தனை, நிலை

continuous scrolling--------------> தொடர் உருளல்

control key-> கட்டுப்பாட்டுத்திறவுகோல், கட்டுப்பாட்டுப் பொத்தான்

control program-----------------> கட்டுப்பாட்டு நிரல்

control statement---------------> கட்டுப்பாட்டுக் கூற்று

control system------------------> கட்டுப்பாட்டு அமைப்பு

conversion----------------------> மாற்றம்

convert-------------------------> மாற்று

coordinates---------------------> ஆயத்தொலைவுகள்

copy----------------------------> நகல்

copy holder---------------------> நகல் தாங்கி

copy protection-----------------> நகல் காப்பு

core storage--------------------> வளையத் தேக்கம்

cost analysis--------------------> விலை பகுப்பாய்வு

cost benefit analysis------------> விலை பயன் பகுப்பாய்வு

cost effectiveness---------------> விலை பயன் திறன்

costing-------------------------> விலையிடல்

counter------------------------> எண்ணி

create--------------------------> படை (படைப்பு)

cursor--------------------------> சுட்டி

cursor control------------------> சுட்டிக் கட்டுப்பாடு

cursor key---------------------> சுட்டிப்பொத்தான்

cursor tracking----------------> சுட்டி பின் தொடரல்

curve fitting-------------------> வளைகோட்டுப் பொருத்தம்

customize---------------------> தனிப்பயனாக்கு

custom software---------------> தனிப்பயன் மென்பொருள்

cut----------------------------> வெட்டு

கணினி கலைச் சொற்கள்

background-------------------> பின்னணி

backspace--------------------> பின்நகர்வு

bad sector-------------------> கெட்ட துண்டம்

bar chart--------------------> பட்டை வரைபடம்

bar code---------------------> பட்டைக் குறிமுறை

bar-code scanner-------------> பட்டைக் குறிமுறை வருடி

bar printer------------------> பட்டை அச்சுப்பொறி

batch processing-------------> தொகுதிச் செயலாக்கம்

bebugging--------------------> பிழைவிதைத்தல்

bill-------------------------> விலைப்பட்டியல்

binary-----------------------> இரும

binary device----------------> இரும நிலைக் கருவி

binary digit-----------------> இரும இலக்கம்

binary number----------------> இரும எண்

binary operation-------------> இருமச்செயற்பாடு

binary system----------------> இரும எண்முறை

bit--------------------------> நுண்மி, துணு, பிட்டு

bit map----------------------> பிட்டுப்படம்

bit mapped screen------------> பிட்டுப் படத்திரை

blank character--------------> வெற்றுரு

block------------------------> கட்டம், தொகுதி

block diagram----------------> கட்ட வரைபடம்

boolean----------------------> பூலியன்

browsing---------------------> மேலோடல்

button(key)------------------> பொத்தான்

byte-------------------------> எண்பிட்டு, எண்ணுண்மி

கணினி கலைச் சொற்கள்

தெரிந்து கொள்வோம் கணினி கலைச் சொற்கள்


absolute address------------> தனி முகவரி

absolute cell address-------> தனித்த நுண்ணறை முகவரி வழங்கல்

access-------------------------> அணுக்கம், அணுகல்

accuracy---------------------> துல்லியம்

action-------------------------> செயல்

active cell--------------------> இயங்கு கலன்

address-----------------------> முகவரி

addressing-------------------> முகவரியிடல்

address modification------> முகவரி மாற்றம்

algorithm--------------------> நெறி முறை

algorithmic language------> நெறிப்பாட்டு மொழி

alignment--------------------> இசைவு

allocation--------------------> ஒதுக்கீடு

alphabetic string------------> எழுத்துச் சரம்

alphameric-------------------> எண்ணெழுத்து

alphanumeric----------------> எண்ணெழுத்து

alphanumeric sort-----------> எண்ணெழுத்து வரிசையாக்கம்

AND gate----------------------> உம்மை வாயில்

animation---------------------> அசைவூட்டம்

apperarance------------------> தோற்றம்

append-------------------------> பின் தொடர், பின்சேர்

application---------------------> பயன்பாடு

applications oriented language--> பயன்பாட்டு நோக்கு மொழி

applications programmer--------> பயன்பாட்டு நிரலர்

applications programming------> பயன்பாட்டு நிரலாக்கம்

applications program------------> பயன்பாட்டு நிரல்கள்

applications software------------> பயன்பாட்டு மென்பொருள்

archive-----------------------------> ஆவணக்காப்பகம்

area search------------------------> பரப்பில் தேடல்

arithmetic expression-----------> எண்கணிதக் கோவை

arithmetic operation-------------> எண்கணித வினை

arithmetic operator--------------> எண்கணித வினைக்குறி

array--------------------------------> வரிசை, அணி

arrow key(direction key)---------> திசைப் பொத்தான்

artificial intelligence--------------> செயற்கை நுண்ணறிவு

assembler------------------------> பொறிமொழியாக்கி

assembly language----------------> பொறி மொழி

audio--------------------------------> ஒலியுணர்

automated data processing-----> தன்னியக்கத் தரவுச் செயலாக்கம்

automatic-------------------------> தன்னியக்க

autopilot--------------------------> தன்னியக்க வலவன்

auxiliary function---------------> துணைச் செயல் கூறு

axes--------------------------------> அச்சுகள்